ராமநாதபுரம்
ராமநாதபுரம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). இவர் ராமநாதபுரம் கவராயர் தெரு பகுதியில் அடுப்புக்கரி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் கடை முன்பு வள்ளல்பாரி வடக்குத்தெருவை சேர்ந்த ராஜா (37) என்பவர் அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தாராம். இதனை கண்ட கோவிந்தன் கடைமுன்பு அசிங்கமாக பேசாதே என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, இரும்பு கம்பியை எடுத்து வந்து கோவிந்தனை சரமாரியதாக தாக்கினாராம். இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.