காட்டு யானைகள் நுழைவதை தடுக்க அகழிகள்

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க அகழிகள் வெட்டும் பணி நடக்கிறது

Update: 2021-04-01 13:26 GMT
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு உள்பட 15 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மொத்தம் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், மலைக்கிராமங்களில் புகுந்து வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு, மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின்பேரில் வனப்பகுதியில் அகழிகள் வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆசிய யானைகள் திட்டத்தின் கீழ் சிறுவாட்டுக்காடு மலைக்கிராமம் முதல் தாழையூத்துக்காடு மலை கிராமம் வரை 3 கிலோமீட்டர் தூரம் வரை அகழி வெட்டப்படுகிறது.

 ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில், வனவர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்