மேட்டுப்பாளையத்தில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையத்தில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-01 09:46 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் நிலை கண்காணிப்புக்குழு பறக்கும்படை அலுவலர் சொல்லமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் காரில் இருந்த நாகராஜ் மற்றும் அவரது மனைவி வாணி ஆகியோர் ஊட்டிக்கு செல்வதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது. 

உடனே கண்காணிப்புக்குழு அலுவலர் சொல்லமுத்து பணத்தை பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் ஒப்படைத்தார். 

அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்