பரமக்குடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்புக்கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் வேட்பாளர் சதன் பிரபாகர் பிரச்சாரம்
புதுக்குடி, ஊரக்குடி, தோளூர் உள்பட 28 கிராமங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
ராமநாதபுரம்,
பரமக்குடி (தனி) சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிக்குடி, புத்தூர், பிடாரிச்சேரி, வேப்பங்குளம், தடுத்தலாங் கோட்டை, கணக்கனேந்தல், கீழப்பருத்தியூர், வழிமறிச்சான், தேவனேரி, மாங்குடி, புதுக்குடி, ஊரக்குடி, தோளூர் உள்பட 28 கிராமங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.அப்போதும அவர்கள் மத்தியில் வேட்பாளர் சதன் பிரபாகர் பேசியதாவது: பரமக்குடி தொகுதியானது அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை. இதை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, முடியாது. ஒவ்வொரு தேர்த லிலும் அ.தி.மு.க. போட்டியா ளர்களுக்கு தோல்வியைத்தான் பரிசாக வழங்கி உள்ளது. அதே போல் இந்த தேர்தலிலும் அவர்களுக்கு அந்தப் பரிசை மக்கள் வழங்க வேண்டும். படிக்காத பாமரர்களையும் பச்சை மையால் கையெழுத்து போட வைத்த இயக்கம் அ.தி.மு.க. கொரோனோ காலத் திலும், புயல், மழை வெள்ளம் காலத்திலும் மக்களை காப்பாற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ற விவசாயி ஆட்சியில் இருப்பதால் தான் தமிழ்நாடு குளிர்ந்து உள்ளது. பரமக்குடி தொகுதியும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே இந்த ஆட்சி தொடரவும்,மீண்டும் என்னை சட்டமன்ற உறுப்பினராக்கவும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். அவருடன் பரமக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் முத்தையா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளும், கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் வாக்குகள் சேகரித்தனர்