மேச்சேரியில் சுகாதார செவிலியரிடம் 5¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
சுகாதார செவிலியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு
மேச்சேரி:
மேச்சேரி அருகே கோனூர் மங்கானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மனைவி ஆர்த்தி (வயது 26). இவர் சந்தைதானம் பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் மேச்சேரி-ஓமலூர் சாலையில் செங்காட்டு பிரிவு அருகே மொபட்டில் குழந்தையுடன் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஆர்த்தியின் ெமாபட்டை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்று விட்டார். அப்போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து ஆர்த்தி லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர், கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.