திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் ‘திடீர்’ போராட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் ‘திடீர்’ போராட்டம்

Update: 2021-03-31 19:30 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4½ ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் 88 பேர் ஒரு வருட கால பயிற்சி டாக்டர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதியோடு பயிற்சி டாக்டருக்கான பணி நிறைவடைகிறது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களுக்கு பயிற்சி டாக்டர் பணி காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பயிற்சி டாக்டர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டு பயிற்சியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்