போலீசார் தீவிர வாகன சோதனை
நீடாமங்கலம் பகுதியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் பகுதியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
போலீசார் கண்காணி்ப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ரொக்கபணம் மற்றும் இதர அன்பளிப்பு பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்காக முயற்சிக்கிறார்களா? என தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், உளப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் காவல் சரகம் கோவில்வெண்ணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
எதுவும் சிக்கவில்லை
திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணதாசன், மூர்த்தி மற்றும் ஆயுதம் தாங்கிய வெளிமாநில போலீசார் இந்த வாகன சோதனையை ஈடுபட்டு இருந்தனர்.
சோதனையில் எதும் சிக்கவில்லை. தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.