பரமக்குடி, முதுகுளத்தூரில் கனிமொழி எம்.பி. பிரசாரம்
பரமக்குடி, முதுகுளத்தூரில் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்
பரமக்குடி
பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முருகேசனை ஆதரித்து தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பரமக்குடி பகுதி எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முருகேசனை கனிமொழி எம்.பி. பேசியபோது, அ.தி.மு.க. அரசு ஊழலில்தான் வெற்றி நடைபோடுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பரமக்குடி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன், பரமக்குடி செயலாளர் சேது கருணாநிதி, நகர பொறுப்பாளர் ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் போகலூர் வக்கீல் கதிரவன், ஜெயக்குமார், சக்தி, அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது, பெட்ரோல், டீசல் உயர்வை கேட்பதற்கு முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியை உண்மையாக பா.ஜ.க. தான் நடத்தி கொண்டிருக்கிறது என்றார். இவருடன் வேட்பாளர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, நவாஸ்கனி எம்.பி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், தி.மு,க, கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், நகர செயலாளர் ஷாஜகான், சிறுபான்மை பிரிவு செயலாளர் சீனி முகம்மது, இளைஞரணி ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமர், காங்கிரஸ் வட்டார தலைவர் ராமர் புவனேந்திரன், நகர செயலாளர் சுரேஷ் காந்தி, வைத்தியனேந்தல் போஸ், ஊராட்சி மன்ற தலைவர் அபுபக்கர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.