மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-31 18:19 GMT
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36). கூலித்தொழிலாளி. 

இவருடைய மனைவி பஞ்சு (32). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

அதில் ஆத்திரமடைந்த ரமேஷ் கற்களால் பஞ்சுவை தாக்கியதாக தெரிகிறது.

 காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பஞ்சு புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்