லாலாபேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலையொட்டி லாலாபேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2021-03-31 18:12 GMT
லாலாபேட்டை
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் லாலாபேட்டையில் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு காமன் கோவில் வீதி, காந்திசிலை, கடைவீதி, சந்தப்பேட்டை, மேல விட்டுகட்டி வரை சென்று முடிவடைந்தது. இதில், கூடுதல் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு அசோக், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு  சசிதர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்