சிந்தாமணிப்பட்டியில் சந்தனக்கூடு ஊர்வலம்
சிந்தாமணிப்பட்டியில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள மைலம்பட்டி, சிந்தாமணிபட்டியை சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து ஆண்டு தோறும் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் சந்தனக்கூடு ஊர்வலம் மைலம்பட்டியில் நடைபெற்றது. இதையொட்டி மையலம் பட்டியிலிருந்து குதிரை மீது போர்வை போர்த்தி ஊர்வலமாக சிந்தாமணிபட்டியில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.