ராதாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை தீவிர ஓட்டு வேட்டை
ராதாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
ராதாபுரம்,
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை நேற்று ராதாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பான்குளம், பண்ணையார்குளம், மகேந்திரபுரம், பட்டா்குளம், நெடுவாழி, ராதாபுரம் பஜார், காரியாகுளம், செம்மன்குளம், சுப்பிரமணியபேரி, தியாகராஜபுரம், பாவிரி தோட்டம், சமத்துவபுரம், பாவேந்தர் பாரதிதாசன்புரம், பரமேஸ்வர புரம், வாணியன் குளம், வி.கே.குளம், உதயத்தூர் பஜார், உதயத்தூர் கீழூர், எதும்பிகாலனி, இளைய நயினார்குளம் வடக்கூர், இளையநயினார் குளம் தெற்கூர், சிதம்பராபுரம், பிரகாசபுரம், அழகானபுரம், ஆத்துக்குறிச்சி, கைலாசபேரி, முடவன்குளம், கஸ்தூரிரெங்கபுரம், குட்டி நயினார்குளம், ஆத்துக்குறிச்சி, ஆமையடி, பெருங்கண்ணங்குளம், அணைக்கரை, புலிக்குளம், நம்பி குறிச்சி, முத்தம்மாள் புரம், மிட்டாதாரர் குளம், கண்ணன் குளம் கோட்டைகருங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தில் இன்பதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி தருவது அ.தி.மு.க. அரசுதான். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி மலர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து இடிந்தகரை தாமஸ் மண்டபத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர் பென்ஸ்சியர், தி.மு.க. பிரமுகர் லூமன் மற்றும் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் வேட்பாளர் இன்பதுரை முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, அன்பு, வெனிஸ், ஜோசப், வினோ, நசரைன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பிரசார நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே. சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, நாங்குநேரி ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முருகேசன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நெல்லை மாவட்ட செயலாளர் அருண்குமார், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.