புதிய குழாய்கள் மாற்றி நிரந்தர தீர்வு முசிறி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. உறுதி

தா.பேட்டை பகுதியில் காவிரி குடிநீர் பிரச்சினைக்கு புதிய குழாய்கள் மாற்றி நிரந்தர தீர்வு முசிறி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. உறுதி.

Update: 2021-03-31 05:04 GMT
முசிறி, 

முசிறி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. தொட்டியம், தா.பேட்டை பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தா.பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய குழாய்கள் மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்கப்படும். குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,500 வழங்கவும், இலவச வாஷிங்மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்டவைகள் கிடைத்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார். அப்போது வேட்பாளருக்கு கட்சியினர் மாலை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கியும், ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பே.சுப்பு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செங்கமலை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயம், குமரவேல், ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள் சுப்பிரமணியன், கிட்டு, பாரதிராஜா, மாசிலாமணி, ராஜா, மகாராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்