மக்கள் பணிதான் எனது முதல் வேலை திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதி
மக்கள் பணியாற்றுவதுதான் எனது முதல் வேலையாக இருக்கும் திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதி.
திருச்சி,
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு பெரியமிளகுபாறை, ராஜாகாலனி, செண்பகா அபார்ட்மெண்ட், மார்க் அபார்ட்மெண்ட், ஸ்டேட் பாங்க் காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரித்தார். அவர் சென்ற இடமெல்லாம் பொது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, சால்வை அணி வித்து, மாலைகள் அணி வித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களிடம் வேட்பாளர் கே.என்.நேரு பேசுகையில், என்னை தேடி வந்து ஆதரவு தெரிவித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். தொகுதி மக்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பிற் கேற்ப, அவர்களின்ஆதர வுடன் எனது பணி சிறப்பாக இருக்கும். மக்கள் பணி ஆற்றுவது தான் எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.
அவருடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செய லாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, புஷ்பராஜ், ம.தி.மு.க. வெல்லமண்டி சோமு, கம்யூனிஸ்டு சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.