பெண்ணிடம் 11 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றுவிட்டார்.
பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை,
மதுரை பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் கார்மேகம். அவரது மனைவி கற்பகவள்ளி (வயது 48). சம்பவத்தன்று இவர் விளாங்குடி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் கற்பகவள்ளி அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள