அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா உடலில் அக்னி சட்டியுடன் பக்தர்கள் வினோத வழிபாடு
அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்கள் உடலில் அக்னி சட்டியை வைத்தபடி வினோத வழிபாடு நடத்தினர்.
அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்கள் உடலில் அக்னி சட்டியை வைத்தபடி வினோத வழிபாடு நடத்தினர்.
வினோத வழிபாடு
அந்தியூர் அருகே எண்ணமங்கலம் விராலிகாட்டூரில் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பக்தர்கள் தினமும் புனித நீர் ஊற்றி வேப்பிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு் வருகின்றன. தொடர்ந்து பக்தர்கள் உடலில் அக்னிசட்டியை வைத்துக்கொண்டு நகர்ந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
விராலி இலையால் பந்தல்
இந்த வினோத வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடந்தது.
அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிற்க கோவில் முன்பு விராலி இலையின் மூலம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பந்தலின் கீழ் அமர்ந்தால் தங்களுக்கு உள்ள நோய் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஏராளமான பக்தர்கள் தின மும் வந்து விராலி இலையால் போடப்பட்ட பந்தலின் கீழ் அமர்ந்து செல்கின்றனர்.
பொங்கல் வைத்தல்
இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தலும், அலகு குத்துதலும், மாவிளக்கு எடுத்து வருதலும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்கப்பட்டு அருகில் உள்ள பொது கிணற்றில் விடப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீராட்டுதல் நடைபெறும். திருவிழாவையொட்டி வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.