கோபியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்டனர்
கோபியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.
கோபியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.
புள்ளிமான்
டி.என்.பாளையம் வனப்பகுதியில் ஏராளமான மான் உள்பட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் கருகி காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊருக்குள்ளும், தோட்டத்துக்குள்ளேயும் புகுந்து வருகின்றன.
அதேபோல் நேற்று டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து ஒரு புள்ளிமான் தண்ணீர் தேடி கோபி சீதாலட்சுமிபுரம் பகுதிக்குள் புகுந்தது. பின்னர் ஊருக்குள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. மேலும் தங்கமணி எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்தது.
முட்டியது
உடனே அங்கிருந்த கடை ஊழியர்கள் அந்த புள்ளிமானை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மான் அவர்களை முட்டியது. எனினும் மானை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் மான் பிடிபடாமல் கடைக்குள் அங்கும் இங்குமாக போக்கு காட்டியது.
இதுகுறித்து பொதுமக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று, கயிற்றால் கட்டி மானை லாவகமாக பிடித்தனர். பின்னர் மானை மினிவேனில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு ெ்சன்றனர்.