பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2021-03-30 20:11 GMT
பட்டுக்கோட்டை:-
பட்டுக்ேகாட்டை, அதிராம்பட்டினத்தில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணிவகுப்பு

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நேற்று மாலை துணை ராணுவ படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோரின் கொடி அணிவகுப்பு நடந்தது. 
கொடி அணிவகுப்புக்கு பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை- தஞ்சை சாலை பாளையம் பகுதியில் தொடங்கி மார்க்கெட், பெரிய கடைத்தெரு, பெரிய தெரு, மணிக்கூண்டு, சின்னையா தெரு, ஹைஸ்கூல் ரோடு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை கொடி அணிவகுப்பு நடந்தது.

பாபநாசம்-அதிராம்பட்டினம் 

பாபநாசம் சட்டசபை தொகுதியில் கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் மத்திய துணை ராணுவ படையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்புக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமை தாங்கினார். அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் தொடங்கிய அணிவகுப்பு சேர்மன் வாடி, பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபெற்றது. இதில் துணை கமாண்டர் ஜிதேந்தர் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்