கல்லிடைக்குறிச்சி அருகே ஆற்றில் பெண் பிணம் மீட்பு

கல்லிடைக்குறிச்சி அருகே ஆற்றில் பெண் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2021-03-30 19:35 GMT
அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சிறிய அணைக்கட்டு பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலை இல்லாமல் பெண் பிணம் ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கல்லிடைக்குறிசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி மகுடத்தில் சமீபத்தில் இறந்தவரின் உடல் ஆற்றில் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்