கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கொட்டாம்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி விலக்கு அருகே நடத்திய சோதனையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த வெள்ளமலை பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது52) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 144 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.