புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, மார்ச்.31-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாலையீடு பகுதியில் 65 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.