தேன்கனிக்கோட்டையில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி கீழே விழுந்து சாவு
தேன்கனிக்கோட்டையில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி கீழே விழுந்து இறந்தாள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் துனிதா (வயது 5). சம்பவத்தன்று வரதராஜ் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நிலைதடுமாறி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் சிறுமியின் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.