சிறுபான்மையினர் நலம் காக்க பாடுபடுவேன் - அ.ம.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் எம்.எல்.ஏ. பேச்சு

சிறுபான்மையினர் நலம் காக்க பாடுபடுவேன் என அ.ம.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2021-03-30 18:30 GMT
சாத்தூர் ,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பெரிய கொல்லபட்டி, சின்ன கொல்லபட்டி, சடையம்பட்டி மற்றும் பல பகுதிகளில் எம். எஸ்.ஆர் ராஜவர்மன் எம்.எல். ஏ குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். என்னை அதிக வாக்கு வித்தியசாத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில் சிறுபான்மையினர் நலம்காக்க பாடுபடுவேன், இந்த பகுதியில் மக்கள் நலன் காக்க கொரோனா காலத்தில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து மாத்திரைகளை தொகுதி முழுவதும் வழங்கியுள்ளேன். மேலும் பேவர் பிளாக் சாலை, அரசு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துள்ளேன். எனக்கு மக்கள் பணியாற்றிட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன்.

நான் உங்களுக்காக உழைக்க அ.ம.மு.க.வின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தில் வேட்பாளராக உள்ளேன். யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள். அந்த பணம் உங்கள் வரி பணம். ஆனால் நீங்கள் குக்கர் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பணியாற்றிட எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார். நான் வெற்றி பெற்ற உடன் இந்த பகுதியில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்த பாடுபடுவேன். வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தருவேன்.

முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். அவருடன் அ.ம.மு.க. கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தே.மு.தி.க. நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்