லால்குடி தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன; தி.மு.க.வேட்பாளர் சவுந்தரபாண்டியன் பிரசாரம்
லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் நேற்று லால்குடி பேரூராட்சி பகுதியில் வார்டு, வார்டுகளாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் லால்குடி தொகுதியில் விவசாய கல்லூரி, விவசாய பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பள்ளி, பெண்களுக்கான ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. செங்கரையூர் - பூண்டி இடையே கொள்ளிடம் பாலம், சாலைகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து இதுபோல நல்ல திட்டங்களை நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் வைரமணி, நகர செயலாளர் துரைமாணிக்கம், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் புருஷோத்தமன், வி.சி.க. தொகுதி பொறுப்பாளர் மரிய கமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் செல்வம், வெற்றிவேல், நகர அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் நகர செயலாளர்கள் ஆரோக்கியசாமி, பழக்கடை முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி இளவரசன், செல்வகுமார், இளங்கோவன், நகர துணை செயலாளர் குணசேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.