கோவையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

Update: 2021-03-30 04:41 GMT
ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை
கோவை

கோவையை பொருத்தமட்டில் ஹோலி பண்டிகையை பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கோவை சுக்கிரவார் பேட்டை, ஆர்.எஸ். புரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் நேற்று ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். 

அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


 மேலும் ஹோலி கொண்டாட்டத்தை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். 

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஹோலிப்பண்டிகை களை இழந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்று குறைந்து இருப்பதால் கோவையில் ஹோலி பண்டிகை களை கட்டியது.

மேலும் செய்திகள்