அரசியல் கட்சிகள் மீது 40 வழக்குகள் பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது 40 வழக்குகள் பதிவு

Update: 2021-03-30 04:20 GMT
ஊட்டி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்தது. அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும். சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. வாக்கு சேகரிப்பு, பிரச்சாரத்தின்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது. 

பொதுக்கூட்டத்தின் போது அனுமதி பெற்று கட்சி கொடிகளை நடவேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இதுவரை ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 28 வழக்குகள், குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் தலா 6 வழக்குகள் என மொத்தம் 40 வழக்குகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் அரசியல் கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்