கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது இருசக்கர வாகனத்தில் சோதனை நடத்திய போது, எந்தவித ஆவணமும் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
------------------