கொங்கணாபுரம் அருகே உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய பெயிண்டரால் பரபரப்பு

உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய பெயிண்டரால் பரபரப்பு

Update: 2021-03-29 23:31 GMT
எடப்பாடி:
கொங்கணாபுரத்தை அடுத்த சடையன் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37), பெயிண்டர். இவர் எடப்பாடி மூலப்பாதை செல்லும் வழியில் வண்ணாங்காடு என்ற பகுதியில் புகலூர் காகித ஆலைக்கு செல்லும் உயர் மின் அழுத்த கோபுரத்தில் நேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் ஏறினார். அதன் உச்சியில் இடது புற பகுதியில் அவர் அமர்ந்து கொண்டார். அதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ே்பாலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் உயர்மின் கோபுரத்தில் இருந்து, அந்த போதை நபரை கீழே இறக்குவது குறித்து தீவிர ஆலோசனை செய்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் ஏராளமானோர் உயர் மின் அழுத்த கோபுரம் உள்ள பகுதிக்கு திரண்டு வந்தனர். அதே நேரத்தில் சேகரின் மனைவி தனது 2 மகன்களுடன் அங்கு வந்தார். அவர்களை பார்த்த சேகர் கீழே இறங்கி வந்தார். அவரை கொங்கணாபுரம் போலீசார் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பைஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்