உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காரை நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காரை நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2021-03-29 20:34 GMT
உடுமலை
உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காரை நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
கண்காணிப்பு குழுக்கள்
தமிழக சட்டமன்றத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிப்பதற்காக பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பதிவு குழுக்கள்ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவினர் 8மணிநேரத்திற்கு ஒரு குழு வீதம்3சிப்டுகளாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று உடுமலை நகரில் தளி சாலையில் டி.வி.பட்டிணம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சரின் கார் சோதனை
அந்த நேரத்தில் உடுமலை சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரான கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்த பகுதிக்கு செல்வதற்காக தளி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது பறக்கும்படையினர் மற்ற வாகனங்களை சோதனை செய்ய நிறுத்தியதுபோன்று அமைச்சரின் காரையும் நிறுத்தி சோதனை செய்தனர்.ஆனால் அமைச்சரின் காரில் பணமோ, பரிசுப்பொருட்களோ எதுவும் இல்லை. இந்த சோதனையைத்தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்று வாக்கு சேகரிக்கத்தொடங்கினார்.

மேலும் செய்திகள்