மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது வடபழஞ்சி மணப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரபு (வயது 34) என்பதும், அவர் மது பாட்டில்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபுவை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.