தஞ்சை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா

Update: 2021-03-29 20:08 GMT
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 578 ஆக உயர்ந்தது. தற்போது 567 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 267 பேர் பலியாகி உள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்