சோழவந்தான்,
அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது41). இவர் கூலி தொழிலாளி. கட்டிடவேலை செய்வதற்கு சோழவந்தானுக்கு மோட்டர் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு நான்கு வழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார். நகரி அருகே வந்தபோது அரசு பஸ் மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா மற்றும் போலீசார் வழக்குப ்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.