தேர்தல் நாளன்று விற்பனை செய்ய இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் நாளன்று விற்பனை செய்ய இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-29 19:55 GMT
அவினாசி,
தேர்தல் நாளன்று விற்பனை செய்ய இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள்  கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
அவினாசி மதுவிலக்கு அமலாக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் மற்றும் போலீசார் அவினாசியை அடுத்த துலுக்கமுத்துர் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். 
சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அவினாசியை அடுத்த ராயர் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ரங்கசாமி (வயது 25) என்பதும் தேர்தல் சமயத்தில் மதுபானம் விற்பனை செய்ததற்காக கடத்தி வந்ததாக தெரியவந்தது. 
2 பேர் கைது
இதேபோல் தாளக்கரை அருகே  ஸ்கூட்டரில் வந்த பெண்ணை போலீசார்  நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஸ்கூட்டரில் 48 மதுபாட்டில்கள் இருப்பதும், விசாரணையில் அவர் மங்கரசு வளையபாளையத்தை சேர்ந்த லூர்துசாமி மனைவி செல்வி (40) என்பதும், தேர்தல் நாளன்று விற்பனை செய்ய ஸ்கூட்டரில் 48 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 96 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர். அவர்கள் வந்த 2 வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்