புதுக்கோட்டை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-03-29 19:07 GMT
அன்னவாசல்:
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடிபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). அதே ஊரை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராஜ்குமார் (35). இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் முத்துடையான்பட்டி கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தனர். 
அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 
2 பேர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணிக்கம் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளனூர் போலீசார் பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்