கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே கத்தியால் குத்தி வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மம்சாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 27). பட்டாசு ஆலை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒரு தலைக்காதல் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் தன்னுடைய காதலை அந்த மாணவிடம் தெரிவித்த போது அவர் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வாலிபர் குமார், கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.