கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது.
கரூர்
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த கொடி அணிவகுப்பை கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு கரூர் ஐந்து ரோட்டில் இருந்து தொடங்கி மாரியம்மன் கோவில், ஜவகர்பஜார் வழியாக சென்று கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் முடிவடைந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.