கீழக்கரை
நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் ராமாநாதபுரம் மாவட்டத்திற்கு திண்டிவனத்தில் இருந்து கீழக்கரைக்கு தர்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கோடை காலம் என்பதால் தர்பூசணியை அதிகம் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து பழ வியாபாரி முருகேசன் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பம் அதிகமாக நிலவி வருவதால் தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது..இதனால் நாங்கள் கொள்முதல் செய்யும் இடங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.