கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சாத்தான்குளம் தச்சமொழி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2021-03-29 15:19 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர். இதையொட்டி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்