ராக்கி கயிறு கட்டி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமாரை வரவேற்ற பெண்கள்

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ராக்கி கயிறு கட்டி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமாரை வரவேற்ற பெண்கள்.

Update: 2021-03-29 13:32 GMT
கரூர், 

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் 
ந.முத்துக்குமார் நேற்று கரூர் வடக்கு காந்திகிராமம், இ.பி. காலனி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதம் தொட்டு வணங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.  

அப்போது ஏராளமான பெண்கள் சகோதரத்துவத்தை வலியு றுத்தும் விதமாக முத்துக் குமாருக்கு கையில் ராக்கி கயிறு கட்டினர். தொடர்ந்து சகோதரன் முத்துக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என்று பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.  மேலும் எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முத்துக்குமார் அந்த பகுதியில் பல நேரங்களில் ஓடோடி சென்று மக்களைப் பார்த்து இருகரம் கூப்பி வணங்கி இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்