தொண்டுகள் தொடர்ந்து செய்திட என்னை வெற்றி பெற செய்யுங்கள்; அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் பேச்சு
உங்கள் பகுதியின் தேவையறிந்து கொடுத்த தேர்தல்வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தில் மாணிக்கம் எம்.எல்.ஏ.,பேசினார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி,செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆண்டிபட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட 34 இடங்களில் வாக்குசேகரித்தார். அவருக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் திறந்த ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் முதல் கிராமம் விராலிப்பட்டி இது தாய்வீடு. இந்த மண்ணை தொட்டுவணங்கிய பின் தான் எல்லாபணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வில் உயரவேண்டும் என்றால் அதற்கு அன்புதான் காரணம் அன்பின் பரிமாற்றம் தான் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. அந்த அன்பு உங்களிடம் உள்ளது உங்களுக்காக நான் பாடுபட காத்திருக்கிறேன். இதற்குமுன் இந்த ஊருக்கு தேவையான நாடகமேடை, சமுதாயக்கூடம், தெருக்களில் பேவர்பிளாக், குடிநீர் என்று அனைத்துவசதிகளையும் செய்துகொடுத்துள்ளேன். இனியும்
என்ன தேவை உள்ளதோ அதை அனைத்தையும் பெற்ற தர தயாராயிருக்கிறேன்.
இந்தபகுதியில் உள்ள பயனாளிகளுக்குதான் விவசாயகடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் அதிகஅளவில் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. நான் கடந்த 5ஆண்டுகளாக என்ன என்ன பணிகள் செய்தேன் என்பதற்கு உதாரணம் சொல்லச்சொன்னால் நீங்கள் நடந்து செல்லும் இந்தசாலை சான்று சொல்லும், இந்த தொகுதியில் பலஇடங்களில் பயனற்ற சாலைகளை சீரமைத்து கொடுத்துள்ளேன்.முதியோர் உதவித்தொகை மட்டும் 9ஆயிரம்பேருக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன்.மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை, குடிநீர், சுகாத£ரம் ஆகியவற்றை செய்துமுடித்துள்ளேன். சாமானியர்களின் முதல்வர் எடபாடியார் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதுபோல் ஆட்சிக்கு வந்ததும் வீட்டுக்கு ஒரு வாசிங்மிஷன், ஆண்டுக்கு 6 விலையில்லாசிலிண்டர், 8கோடியே8லட்சம் ரேசன் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிக்கு ரூ.1,500, 200 யூனிட் இலவச மின்சாரம்,அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசுவேலை என்று அனைத்தையும் நிறைவேற்றுவோம். இதுபோல்தொண்டுகள் தொடர்ந்து
செய்திட இரட்டைஇலையில் வாக்களித்து என்னை வெற்றிபெறசெய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். உடன்; முன்னாள்யூனியன்துணைசேர்மன் ராஜேஷ்கண்ணா, மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் வழக்கறிஞர் கார்த்திக், கூட்டுறவுசங்கதலைவர்கள் துரைநடராஜன், உங்குசாமி, பஞ்சாயத்து தலைவர் ஆலயமணி, பாரதியஜனதாகட்சி நிர்வாகி முரளி ராமசாமி உள்படபலர் வந்திருந்தனர்.