திருப்பூரில் மாரத்தான் போட்டி
100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி திருப்பூரில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர்,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் நேற்று காலை பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் மற்றும் புஷ்பா ஜங்சன் வரை ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதனை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தொடங்கிவைத்தார். இதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பலரும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.