தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்

தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் செலுத்தினர்

Update: 2021-03-28 21:30 GMT
வாடிப்பட்டி
சட்டமன்ற தேர்தலையொட்டி சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டபயிற்சி வகுப்பு தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜஸ்டின ்ஜெயபால் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தாசில்தார் பழனிக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல்பிரிவு தாசில்தார் இசக்கிமுத்துகுமார் வரவேற்றார். இதில் சோழவந்தான் தொகுதியில் உள்ள 305 வாக்குசாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சஞ்ஜிவிநாதன் நன்றி கூறினார். இதில் தபால் ஓட்டுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது அதில் 528 பேர் தபால் ஓட்டு போட்டனர். அந்த ஓட்டுகளை தொகுதிவாரியாக பிரித்து அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் மற்ற தொகுதிகளிலிருந்து அரசு பணியாளர்களால் சோழவந்தான் தொகுதிக்கு 491 தபால் ஓட்டு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று சோழவந்தான் தொகுதியில் உள்ள 198 மாற்றுதிறனாளிகள், முதியோர்களின் தபால் வாக்குகளை சேகரிக்க 7 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்