நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா

Update: 2021-03-28 19:06 GMT
நாமக்கல், மார்ச்.29-
நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,-039 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் திருச்செங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. 
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,061 ஆக உயர்ந்து உள்ளது.
முககவசம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
=======

மேலும் செய்திகள்