குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
காரைக்குடி, இளையான்குடி, காளையார்கோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
காளையார்கோவில்,
காரைக்குடி, இளையான்குடி, காளையார்கோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி காளையார்கோவில் சகாயராணி மருத்துவமனை வளாகத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி கொண்டு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக காளையார் கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை இருதயராஜ் தலைமையில் காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் மற்றும் உதவி பங்குத்தந்தை ரிச்சர்ட் ஆகியோர் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.
காரைக்குடி
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தின் சார்பில் அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றார்கள். பங்குத்தந்தை எட்வின்ராயன், உதவி பங்குத்தந்தை ஜாலிமரிவளன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் செக்காலை சாலை வழியாக வந்து ஆலயத்தில் நிறைவு பெற்றது.
இதேபோல் காரைக்குடியை சுற்றியுள்ள செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையிலும், அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோதி தலைமையிலும், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஜெரால்டுஜோசப் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
இளையான்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சகாய அன்னை ஆலயத்தில் இருந்து குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.