வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
வால்பாறை,
வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் திருவிழா நடந்தது. விழாவில் பல்வேறு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தன.
தொடர்ந்து முருக பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.