அனுப்பர்பாளையம்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பகரன் பட்டேல். இவருடைய மனைவி அனுசியா பட்டேல்திருமணத்திற்கு பிறகு பகரன் பட்டேல் மனைவியுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஆனால் கணவன்மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பகரன் பட்டேல் அனுசியா பட்டேலை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார். இதன் பின்பு அனுசியா பட்டேல் திருப்பூர் வெங்கமேட்டை அடுத்த அலமேலுநகர் பகுதியில் தனியாக தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுசியா பட்டேல் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உடல் சிதைந்து, துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அனுசியா பட்டேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.