சாலையில் சிந்திய எண்ணெய் சீரமைத்த போலீசார்

சாலையில் சிந்திய எண்ணெய் சீரமைத்த போலீசார்

Update: 2021-03-28 18:00 GMT
திருப்பூர்
திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே நேற்று காலை பொக்லைன் எந்திரம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த எந்திரத்தில் இருந்த எண்ணெய் சாலையில் சிந்தியது. இதன் பின்னர் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலர் எண்ணெயில் வழுக்கி விழுந்தபடி சென்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலையில் மண்ணை கொட்டினர். மேலும், அந்த பகுதியில் நின்றபடி போக்குவரத்தை சீர் செய்தனர். வாகன ஓட்டிகளிடம் மெதுவாக செல்லும்படியும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்