விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

காங்கேயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-03-28 17:41 GMT
காங்கேயம்
காங்கேயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள படியூர் - ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கெயில் கிடங்கு முன்பு நேற்று மதியம் 1 மணியளவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இதில் கெயில் ஏரி காற்று குழாய் திட்டத்தை மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதி கொடுத்த அரசை கண்டித்தும், இந்த திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கோஷங்கள் எழுப்பினர்
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், மாநில செயலாளர் முத்துவிஸ்வநாதன், மாநில தலைவர் சண்முகசுந்தரம், மற்றும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கெயில் ஏரி காற்று குழாய் திட்டத்தை மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதி கொடுத்த அரசை கண்டித்தும், இந்த திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்