வடகீரனூரில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர்

வடகீரனூரில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர்

Update: 2021-03-28 17:06 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடகீரனூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்தன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வீசி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவ்வழியாக செல்லும் சிறுவர்களை துரத்தி கடித்தும் வந்தன. மேலும் வீட்டின் மாடிப் பகுதியில் உலர வைக்கப்பட்ட தானியங்கள் மற்றும் துணிகளையும், அந்த வழியாக செல்லும் கேபிள் வயர்களையும் சேதப்படு்த்தி வந்தன.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதோடு, அச்சத்துடன் இருந்து வந்தனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர், பொது மக்களின் ஒத்துழைப்போடு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அந்த குரங்குகளை அப்பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.

மேலும் செய்திகள்