போடியில் பலத்த மழை

போடியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Update: 2021-03-28 16:44 GMT
போடி:

தேனி மாவட்டம் போடியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 

இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. 

இந்த மழையால் இரவு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

மேலும் செய்திகள்